திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், நிறுவனர் எஸ்.கே.செல்வம் (வயது 54) திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் தனது வேட்பு மனுவை முதல் நபராக தாக்கல் செய்தார்.
இவர் முடி திருத்தும் தொழில் மற்றும் நாதஸ்வர வித்துவான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் இரண்டு முறை திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு களம் கண்டு படுதோல்வி அடைந்துள்ளார்.
தற்போது முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய இரண்டாவது நாளில் முதல் நபராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு இதுவரை ஒரே ஒரு நபர் மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment