நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் அரசு வழங்கும் இலவச வீட்டு மனைபட்டா வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தின் மாவட்ட கெளவுரவ தலைவர் முத்துக்குமரன். தலைமையில் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அவர்களிடம். கோரிக்கை கோரிக்கை மனுவினை அளித்தனர். உடன் மாவட்டத் தலைவர் முரளி. உட்பட 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
பின்னர். மாவட்டத்தில் நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரும் நாங்கள் வறுமை கோட்டிற்குள் உள்ளவர்கள். நாங்கள் தமிழ்நாடு பாரம்பரிய கலைகளை பாதுகாத்து மற்றும் கடைப்பிடித்து வருகின்றோம். ஆனால் எங்களது குடும்பம் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம் எங்களுக்கு சொந்தமான வீடு நிலம் என்பது எங்களுக்கு இல்லை ஆகவே கலைஞர்கள் மீது இறக்கம் காட்டி மேற்கண்ட மாவட்டத்தில் வசிக்கும் நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனை வழங்க மாவட்ட ஆட்சியர் முன் வரவேண்டும்.
பின்னர் அரசு வழங்கி வரும் இலவச வீட்டு மனை பட்டா கலைஞர்கள் ஆகிய எங்களுக்கும் வழங்க வேண்டும் மற்றும் எங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு மனுவில் தெரிவித்தனர்

Comments
Post a Comment