தூய்மைப் பணியில் அத்தியந்தல் ஊராட்சி மன்ற தலைவர் இரா.முருகன் சிறப்பாக செயல்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் ஊராட்சிக்குட்பட்ட கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை அகற்றும் பணிகளில் அத்தியந்தல் ஊராட்சி மன்ற தலைவர் இரா.முருகன் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை கூட்டி குப்பை ஏற்றிச்செல்லும் வாகனத்தில் அனுப்பி வைத்து தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இரா.முருகன் அவர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஒட்டி அமைந்துள்ள அத்தியந்தல் கிராம தூய்மை பணியாளர்களைக் கொண்டு கிரிவலப் பாதை சாலைகள் முழுவதும் குப்பைகளை அகற்றும் பணியில் துரிதமாக செயல்பட்டு குப்பைகளை சேகரித்து குப்பை வாகனத்தில் குப்பைகளை அனுப்பி வைத்து சாலைகளை மிகவும் தூய்மையான முறையில் தொடர்ந்து பராமரித்து வருகிறார்.
தான் ஒரு ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பில் இருந்தாலும் தானும் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை சேகரித்து குப்பைகளை வண்டியில் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்ந்து கிரிவலப் பாதையில் தூய்மை பணி மேற்கொண்டு வருவதால் கிரிவலப் பாதை முழுவதும் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. இதனால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
.jpg)

.jpg)
Comments
Post a Comment