திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர்-கல்பூண்டி செல்லும் சாலையில் உள்ள ஜெயம் வித்யாஸ்ரம் (சி.பி.எஸ்.இ) பள்ளியின் 6-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
ஜெயம் கல்வி நிறுவனங்களின் தலைவர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். ஜெயம் அறக்கட்டளை செயலாளர் ஜெயலட்சுமி, மேலாண்மை இயக்குனர் டாக்டர் சுமித்ராதேவி, இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுமதி அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் மாணவ-மாணவிகளின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது பள்ளியின் தலைவர் நம்பிராஜன் எல்.கே.ஜி, யு.கே.ஜி சிறார்களுக்கு பட்டங்கள் வழங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் ஆகியவற்றை வழங்கி பாராட்டியும், வாழ்த்துரை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியினை ஆக்சிலின் பிரேம குமாரி தொகுத்து வழங்கினார். இயக்குனர் விஜயகுமார் நன்றி கூறினார்.
இதில் ஆசிரியர்கள் மாலதி, ஜோதி, கவிதா, வசந்தகுமாரி,அக்ஷயா,விஜயலட்சுமி,சிராஜுதா, கற்பகம்,ரேகா, ரம்யா, மாலா, ஐஸ்வர்யா மற்றும் பள்ளி அலுவலர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.





Comments
Post a Comment