விளம்பர விடியா திமுக ஆட்சியில் தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறியதை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதைக்கு எதிரான மனித சங்கிலி போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் எதிரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி போதைப் பொருட்கள் கடத்தலால் சமுதாயத்தை சீரழிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து கீழ்பென்னாத்தூர் அதிமுக நகர செயலாளர் ஓ.சி.முருகன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் ஏ.கே.அரங்கநாதன் கண்டன உரையுடன் 500க்கும் மேற்பட்ட பெரும் திரளான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்ட மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை ஒழிப்போம், வாக்களித்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாச்சு, விடியா திமுக அரசின் அராஜகங்களை ஒழிப்போம்,
போதைப் பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறிப்போச்சு என்பன உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன், அதிமுக நகர அவைத்தலைவர் பாண்டுரங்கன், பொதுக்குழு உறுப்பினர் கே பி கே சாந்தி, நகர இணை செயலாளர் சிவராமன், நகர பொருளாளர் கஜேந்திரன், நகரத் துணைச் செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி மகேஸ்வரன், மகளிர் அணி மல்லிகா மயில்வாகனன், வட்டச் செயலாளர்கள் ராணி, கதிரேசன், ராஜேந்திரன், கோவர்தனன், பாண்டியன், கோபி, நகர துணை செயலாளர் ஜே.சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெகஜீவன் ராம், ஐடி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ராஜ்குமார் உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.





Comments
Post a Comment