ஸ்ரீ பால்முனீஸ்வரன் சுவாமி ஆலய 48ம் நாள் மண்டலாபிஷேக பூர்த்தி விழா, 108 சங்காபிஷேகம் மற்றும் பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், மேக்களூர் கிராமம் பூவரசன் புரவடையில் அருள்பாளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பால் முனீஸ்வரன் சுவாமி ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா, சங்காபிஷேகம் மற்றும் பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மங்கள இசையுடன், அனுக்ஞை, கும்பஸ்தானம், மகா சங்கல்பம், திரவியாஹூதி, பூர்ணாஹீதி, அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக பெண்கள் 108 பால்குடம் எடுத்து வந்து பால்முனீஸ்வர பகவானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.
முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டம் அமைத்து யாக பூஜைகள் நடத்தப்பட்டது. 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. கலசங்கள் கோயிலை சுற்றி வந்து ஸ்ரீ பால் முனீஸ்வரர் மூலவர் மற்றும் விஸ்வரூபத்திற்கும், பரிவார தெய்வத்திற்கும் உச்சியில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மண்டலாபிஷேக பூர்த்தி விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Comments
Post a Comment