42வது கல்வாரிமலை சிலுவைப்பாதை மற்றும் திருப்பலி பிரார்த்தனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜெபித்தனர்
திருவண்ணாமலை மாவட்டம், சோமாசிபாடி அடுத்த ஐங்குணம் கிராமத்தில் கல்வாரிமலை சிலுவை பாதை அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தில் 6வது வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு சிலுவைப் பாதை தொடங்கி அதனை தொடர்ந்து திருப்பலி ஆனது நிறைவேற்றப்படும்.
சோமாசிபாடி பங்குத்தந்தை ஏ.சி.ஜான் பீட்டர் முன்னிலையில், திருவண்ணாமலை மறைக்கோட்ட அதிபர் கே.எஸ்.ஞானஜோதி தலைமை ஏற்று வழி நடத்தினார்.
அவருடன் இணைந்து அருட்தந்தை பவுல் வேளாங்கண்ணி, அருட்தந்தை ஜோசப்ராஜ், அருட்தந்தை ஸ்டீபன்ராஜ், அருட்தந்தை ராயப்பன், அருட்தந்தை வேளாங்கண்ணி, அருட்தந்தை லாரன்ஸ் குருக்கள் வழி நடத்தினார்கள். இதனை அனைத்தையும் சோமாசிப்பாடியைச் சேர்ந்த பங்குத்தந்தை ஏ.சி.ஜான்பீட்டர் ஒருங்கிணைத்தார்.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மற்றும் இந்து மக்கள் கலந்து கொண்டு ஜெபத்தில் ஈடுபட்டனர்.





Comments
Post a Comment