ஸ்ரீ எல்லை காளியம்மன் ஆலய 3ம் ஆண்டு மயான கொள்ளை , மயானத்திலிருந்து தீச்சட்டி ஏந்தி நடனமாடியபடி வந்து தீ மிதித்து வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், கத்தாழம்பட்டு கிராமத்தில் அருள்பாளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ எல்லை காளியம்மன் ஆலய 3ம் ஆண்டு மயான கொள்ளை விமரிசையாக நடைபெற்றது.
இதில் அருள் வாக்கு பரதேசி சித்தர் பாலு தலைமையில் நடைபெற்ற மயான சூறை வைபவம் கத்தாழம்பட்டு கிராமத்தில் உள்ள மயானத்தில் இருந்து துவங்கி, தீச்சட்டி ஏந்தி, வாயில் எலும்பு துண்டுகளை கடித்த படி பரதேசி சித்தர் பாலு நடனாடியபடி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்தார். அப்போது வீட்டில் இருந்த பெண்கள் மருள் வந்து சுவாமி ஆடி வந்தனர்.
ஸ்ரீ எல்லை காளியம்மன் ஆலய வளாகத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் பரதேசி சித்தர் பாலு இறங்கி மயான சூறை விடப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பெண்களுக்கு மடியில் சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.

Comments
Post a Comment