கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் 106 போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் அன்பு, மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், பேரூராட்சி முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத் தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்தார்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் உள்ளிட்ட 106 மையங்களில் இப்பணிகள் நடைபெற்றது.
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் பணிகள் முகாம்களில் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளாத குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் நடைபெறும் என வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ்பாபு, சமுதாய சுகாதார செவிலியர் சந்திரகாந்தா,மருந்தாளுனர் பாரிவள்ளல், வார்டு கவுன்சிலர்கள் கவிதா ஏழுமலை, ஜீவா மனோகர், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.





Comments
Post a Comment