சங்கராபுரத்தில் உள்ள தாவாப்பிள்ளை திருமண மண்டபத்தில் தேசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2500 கராத்தே மாணவர்கள் தேசிய கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக சந்தானம் தற்காப்புக் கலை மற்றும் சிலம்பம் அகாடமி மாணவர்கள் 30 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர். இதில் முதல் பரிசு 25 பேர், இரண்டாம் பரிசு 5 பேர் என சந்தானம் சிலம்பம் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றனர் .
இதில் சந்தானம் சிலம்பம் அகாடமி நிறுவனர் ஆசான் ச.சரவணன் அவர்களுக்கு கல்லை கலைக்கூடம் விளையாட்டு வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் வீரவாள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் மகா குரு துரோணாச்சார்யா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசான் ச.சரவணன் மற்றும் கராத்தே K.ராஜசேகர் வாழ்த்துக்களை தெரிவித்து மாணவர்களை பாராட்டி ஊக்குவித்தனர்.
இப்போட்டியில் மாணவி ச.தாருணிகா கட்டா பிரிவில் முதல் பரிசு தேசிய அளவில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment