சோ.கீழ்நாச்சிபட்டு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகளுடன் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், சோ.கீழ்நாச்சிபட்டு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஆண்டு விழா நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். விடுப்பு எடுக்காமல் 100% பள்ளிக்கு வந்த மாணவர்கள், கலை நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என ஏராளமான மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்து ஊக்குவித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் உமா மகேஸ்வரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகன்யா, தலைமை ஆசிரியர் சுகுனா, உதவி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஊர் பெரியோர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவ மாணவிகள் நடனம், நாடகம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.





Comments
Post a Comment