கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காவல் தெய்வங்களை காக்க வலியுறுத்தி இந்து முன்னணி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ், வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட பொது செயலாளர் அருண்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு ஆலயத்தின் பக்தர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் அறநிலை துறையின் அராஜகத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தனி ராஜாங்கம், கட்டப்பஞ்சாயத்து செய்து ரவுடியிசம் செய்துகொண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் தொடர்ந்து பணியாற்றி வரும் செந்தில் என்பவரை மாற்றாமல் இருப்பதை கண்டித்தும்,
பாதுகாப்பு பணியில் இருந்த பின் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணியினர் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்து முன்னணியின் வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட பொது செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாக செந்தில் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர பொதுச்செயலாளர் மஞ்சுநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜி எஸ் மணி எம் எஸ் சேகர் உள்ளிட்ட ஏராளமான இந்து முன்னணியினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காவல்துறையினர் நடந்து கொண்டது மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை கைது செய்வதற்காக காவல் வாகனங்களை எடுத்து வந்து நிறுத்தியது சிறிது நேரம் பரபரப்பை உண்டாக்கியது.
பின்னர் ஹிந்து முன்னணியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பில் இருந்து நேரடியாக புறப்பட்டு அண்ணா சிலை வரை கண்டன முழக்கங்களை ஏற்படுத்தியவாறு சென்றனர். மேலும் அண்ணா சிலை அருகே கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதனால் அங்கு போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டு பரபரப்பும் காணப்பட்டது.





Comments
Post a Comment