திருவண்ணாமலை அடுத்த சம்பந்தனூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஏழுமலை (63). இவர் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
பொதுமக்களுக்கு தூய்மையான எண்ணெய் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், மணிலா எண்ணெய் உள்ளிட்டவற்றை சுயமாக தனது செக்கில் ஆடி ஒரு சேவையாக மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
தனது கிராமத்தில் உள்ள சொந்த வீட்டில் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு அதிகமான வாடிக்கையாளர் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் தூய்மையான எண்ணையை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலும், அவர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும், யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என்கின்ற நோக்கத்திலும் இந்த பணியை செய்து வருகிறார்.
சமையல் எண்ணெய் மட்டுமன்றி மிளகாய்த்தூள் அரைக்கும் மிஷின் உள்ளிட்டவற்றை வைத்து அரிசி மாவு, இட்லி மாவு, புண்ணாக்கு அரைக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை வைத்து தொழில் செய்து வருகிறார்.
இருப்பினும் இவருக்கு போதிய வருமானம் இல்லாததாலும், அவர் மாற்றுத்திறனாளி என்பதாலும் மின்சாரம் செலவு அதிகமாவதை கருத்தில் கொண்டு இவருக்கு அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தில் மானியம் வழங்கினால் இந்த தொழிலை தொடர்ந்து நடத்தி பொதுமக்களுக்கு ஒரு சேவையை செய்வதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என்று தனது கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் பெறும் உதவி தொகை கூட பெறாமல் சுயமாக தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment