குருமன்ஸ் பழங்குடியின எஸ்.டி ஜாதி சான்றிதழ் வேண்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் பிறப்புரிமை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே குருமன்ஸ் பழங்குடியின சான்று வேண்டி மக்களின் குரல் அறக்கட்டளை மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.வேலு தலைமையில் பிறப்புரிமை மீட்டெடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசன் சிறப்புரையாற்றினார். திருவண்ணாமலை மாவட்ட குருமன்ஸ் பழங்குடியின மக்கள் ஜாதி சான்றிதழ் கேட்டு பலகட்ட போராட்டங்களை நடத்தினர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஜாதி சான்று கலாச்சாரம் ஆய்வு அறிக்கையும் செய்யப்பட்டு வழங்குவதாகவும் அறிவித்தனர்.இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்காமல் காலம் கடத்துவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பழங்குடியின மக்களின் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் தெய்வ வழிபாடு உள்ளிட்டவை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு தலையில் தேங்காய் உடைத்து நூதன முறையில் பாட்டு பாடி தங்கள் வழிபாட்டு நெறிமுறைகளை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
நிறுவனர் மா.சரஸ்வதி ஒருங்கிணைப்பில் முருகேசன், துரைராஜ், நாராயணசாமி, மனோகரன், ரமேஷ், அர்ஜுனன், விஜயராஜ், சுனில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று சந்தித்து அவரிடம் தங்களின் குருமன்ஸ் சாதி சான்றிதழ் கோரிக்கை மனுவினை அழித்து சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர்..





Comments
Post a Comment