திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கிரிவலப் பாதை 14 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களுக்கும் இன்று ஒரே நாளில் ஒரே நேரத்தில் அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை காஞ்சி சாலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சந்திர லிங்கத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
எனினும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கும் குழாய்கள் மூடப்பட்டு இருந்ததால் குடிநீர் இல்லாத கும்பாபிஷேகமாக அமைந்திடவே பக்தர்கள் குடிநீரை தேடி அலைந்தனர்.
அருகிலுள்ள அருணாச்சலம் மகா அன்னதானமடத்தின் நிறுவனர் அருணாச்சலம் அடியார்கள் அமைத்திருந்த குடிநீர் குழாயில் பக்தர்கள் குடிநீர் பருகினர்.
கிரிவலம் வரும் பக்தர்கள் குடிநீர் தாகத்தால் அலை மோதாத வகையில் குடிநீர் குழாய்களில் குடிநீர் சப்ளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.



Comments
Post a Comment