தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணன் கே.அண்ணாமலை அவர்களின் நல்லாசியுடன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் ஆர்.பாலசுப்பிரமணியம் பிஎஸ்சி அவர்கள் ஆதரவுடன், கவிஞர் அ.தங்கராஜி எம்ஏ, ஒன்றிய தலைவர், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் உயிரெழுத்து ஆ" ஓசை" நெடில் எழுத்தில் ஒரே எழுத்தில் தொடங்கும் ஆயுத பூஜை சிறப்பு கவிதை!
ஆயுதத்தை
ஆட்சி செய்யும்
ஆருத்ர நாயகியே!
ஆதியும்
ஆனவளே
ஆணவத்தை அழிப்பவளே!
ஆகாத செயலும்
ஆகுமே! எந்த தொழிலும்
ஆத்தா உன் அருளாலே
ஆக்கம் தந்து
ஆள்பவளே யாவரையும்
ஆட்டம் கண்டு
ஆட்டி வைப்பவளே ஆத்திரப்படுவோரும் வீண்
ஆசைப்படுவோரும் ஆணையிடுவோரும்
ஆலயம் தொழாதோர் கர்வம் நீக்கி
ஆர்வம் தந்து களிப்பவளே
ஆறு அறிவுக்கும் அர்த்தமானவளே
ஆறாகப் பெருகும் கல்வி கற்பவற்கு
ஆச்சரியமூட்டும் அறிவர்தனியே
ஆறுமுகனுக்கும் அருள்பவளே
ஆதி சிவனுக்கு கல்விக்கரசியாய் ஆனவளே
ஆதி பரம் பொருளின் அன்னையே
ஆயக்கலைகள் 64ம் அருள்பவளே
ஆகாய கங்கைக்கும் அமிர்தரசியே
ஆனந்தம் தருபவளே
ஆயுதத் தொழில் முன் சிறப்பவளே
ஆகட்டும் தொடரட்டும் எத்தொழில்
ஆக இருப்பினும்
ஆசி தருவாய் கலைவாணியே!
இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!
கவிஞர் ஆ. தங்கராஜி எம்ஏ,
ஒன்றிய தலைவர்,
துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம்.

Comments
Post a Comment