திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், கீரனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கெங்கைஅம்மன் ஆலய கூழ்வார்த்தல் திருவிழா கரகம் ஜோடித்து, காப்பு கட்டி வானவேடிக்கையுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கீரனூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் உள்ளிட்ட மூன்று கரகங்கள் ஜோடிக்கப்பட்டு, பம்பை உடுக்கை அடித்து பாட்டு பாடி இளைஞர்கள் மீது சுவாமி வந்த பிறகு காப்பு கட்டப்பட்டது. பின்னர் 3 கரகங்களை இளைஞர்கள் தலையில் சுமந்து வந்து அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாக வந்தனர். மூன்று கரகங்களும் ஊர்வலமாக வந்த போது ஊர் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அம்மனுக்கு பாத பூஜை செய்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
ஊர் முழுவதையும் சுற்றி வலம் வந்த பிறகு மாலை சுமார் 6 மணி அளவில் கெங்கைஅம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு கூழ் வார்த்தல் திருவிழா ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூழ்வார்த்தல் திருவிழாவை வானவேடிக்கையுடன் வெகு விமரிசையாக நடத்தினர்.
இந்த திருவிழாவில் அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்து படைத்த கூழினை கோயிலுக்கு எடுத்து வந்து அம்மன் கோயிலில் கூழ்வாரத்தனர்.
கூழ்வார்த்தல் திருவிழாவை ஒட்டி நாளை இரவு நாடகமும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment