மகாத்மா காந்தி தேசிய வெள்ளி விழா கராத்தே போட்டியில் ஷீகான் சரவணன் அவர்களுக்கு மாகாத்மா காந்தி வாழ்நாள் சாதனையாளர் விருது
சென்னை பழனிச்சாமி பன்னோக்கு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய வெள்ளி விழா கராத்தே போட்டியில் 30க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் பங்கு பெற்றனர்.
கராத்தே போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 10, இரண்டாம் பரிசு 15, மூன்றாவது பரிசு 5 பேர். கியோஷி ரமேஷ் பாபு அவர்கள் ஆசியுடன் டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியில் ( ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே டோ இந்தியா) கராத்தே மாணவர்கள் தேசிய கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஷீகான் சரவணன்.ச அவர்களுக்கு மாகாத்மா காந்தி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவருக்கு அதற்கான கேடயம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
உடன் சென்சாய்.கு . ராஜசேகர் கராத்தே போட்டியில் கவுரவித்தார். போட்டி நடத்துநர் ஷீகான் சசிகுமார் அவர்கள், உதவி பயிற்சியாளர் கராத்தே விக்னேஸ்வரன் மற்றும் கராத்தே பிரபாகரன் மற்றும் கராத்தே பாண்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment