பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்கும் துண்டு பிரசுரங்கள் பட்டியலணி மாவட்டத் தலைவர் விஜயராஜ் தலைமையில் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில், கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாரையூர் கிராமத்தில் பட்டியலணி மாவட்டத் தலைவர் விஜயராஜ் தலைமையில், ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி ஏற்பாட்டில் பட்டியல் இன மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, பட்டியல அணி மாநில துணைத்தலைவர் குட்டி தீனதயாளன், மாநில பட்டியல அணி செயலாளர் பாண்டியராஜன், வேலூர் கோட்ட பொறுப்பாளர் ஆனந்தன், மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவசங்கரன், கவிதா பிரதீஷ், மாவட்ட செயலாளர் குமார் ராஜா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், மகளிர் அணி தமிழரசி, பட்டியல் அணி பொதுச் செயலாளர் வெங்கடேசன், அலெக்ஸ், மற்றும் திரளான பொதுமக்களும் கட்சியின் நிர்வாகிகளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பட்டியலணி ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி வீட்டில் அனைத்து நிர்வாகிகளும் மதிய விருந்து கலந்து கொண்டு மதிய உணவு சாப்பிட்டனர்.
மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் வேட்டவலம் அருகே நாரையூர் கிராமத்தில் நடைபெற்ற பட்டியலணி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும் ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இதில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் , பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு சாதனைகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறி பிரதமரின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இன்று இரண்டாவது இடமாக திருவண்ணாமலை அடுத்துள்ள கிளியாப்பட்டு கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால சாதனைகள் விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி அவர்களுக்கு தேவையான மத்திய அரசு திட்டங்கள் நேரடியாக வந்து சேருவதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியலின மாவட்ட தலைவர் விஜயராஜ் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment