மோடியின் 73வது பிறந்தநாளை ஒட்டி 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கி விமரிசையாக கொண்டாடிய துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜகவினர்
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73வது பிறந்தநாள் விழா முன்னிட்டு துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம், வேடந்தவாடி ஊராட்சியில் வேதநாதீஸ்வரர் சமேத வேதநாயகி ஈஸ்வரன் ஆலயம் மற்றும் குருபகவான் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் பாரத பிரதமர் மோடி பெயரில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை மற்றும் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, புடவைகள் மற்றும் இனிப்புகள் கொடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் அ.தங்கராஜி MA தலைமை தாங்கினார். மன் கி பாத் நிகழ்ச்சி மாவட்ட பொறுப்பாளர் இளஞ்செழியன் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றிய பொதுச்செயலாளர் ஜி.சத்தியமுர்த்தி சர்மா, டி.சரவணன், முருகையன், சந்திரபாபு, ரத்தினவேல், பாஸ்கரன், அருணாச்சலம், செல்வராஜ், சுப்பிரமணி, ஆறுமுகம், அண்ணாமலை மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment