Skip to main content

Posts

Showing posts from September, 2023

பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்கும் துண்டு பிரசுரங்கள் பட்டியலணி மாவட்டத் தலைவர் விஜயராஜ் தலைமையில் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில், கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாரையூர் கிராமத்தில் பட்டியலணி மாவட்டத் தலைவர் விஜயராஜ் தலைமையில், ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி  ஏற்பாட்டில் பட்டியல் இன மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்  பாலசுப்பிரமணி, பட்டியல அணி மாநில துணைத்தலைவர் குட்டி தீனதயாளன், மாநில பட்டியல அணி செயலாளர் பாண்டியராஜன், வேலூர் கோட்ட பொறுப்பாளர் ஆனந்தன், மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவசங்கரன், கவிதா பிரதீஷ், மாவட்ட செயலாளர் குமார் ராஜா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், மகளிர் அணி தமிழரசி, பட்டியல் அணி பொதுச் செயலாளர் வெங்கடேசன், அலெக்ஸ், மற்றும் திரளான பொதுமக்களும் கட்சியின் நிர்வாகிகளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.   பட்டியலணி ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி வீட்டில் அனைத்து நிர்வாகிகளும் மதிய விருந்து கலந்து கொண்டு மதிய உணவு சாப்பிட்டனர்.   மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் வேட்டவலம் அருகே நாரையூர் கிராமத்தில் நடைபெற்ற பட்டியலணி மக்கள் ...

மோடியின் 73வது பிறந்தநாளை ஒட்டி 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கி விமரிசையாக கொண்டாடிய துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜகவினர்

  பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73வது பிறந்தநாள் விழா முன்னிட்டு துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம், வேடந்தவாடி ஊராட்சியில் வேதநாதீஸ்வரர் சமேத வேதநாயகி ஈஸ்வரன் ஆலயம் மற்றும் குருபகவான் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் பாரத பிரதமர் மோடி பெயரில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை மற்றும் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, புடவைகள் மற்றும் இனிப்புகள் கொடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இதில் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் அ.தங்கராஜி MA தலைமை தாங்கினார். மன் கி பாத் நிகழ்ச்சி மாவட்ட பொறுப்பாளர் இளஞ்செழியன் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது.  ஒன்றிய பொதுச்செயலாளர் ஜி.சத்தியமுர்த்தி சர்மா, டி.சரவணன், முருகையன், சந்திரபாபு, ரத்தினவேல், பாஸ்கரன், அருணாச்சலம், செல்வராஜ், சுப்பிரமணி, ஆறுமுகம், அண்ணாமலை மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கெங்கைஅம்மன் ஆலய கூழ்வார்த்தல் திருவிழா

 திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், கீரனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கெங்கைஅம்மன் ஆலய கூழ்வார்த்தல் திருவிழா கரகம் ஜோடித்து, காப்பு கட்டி வானவேடிக்கையுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. கீரனூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் உள்ளிட்ட மூன்று கரகங்கள் ஜோடிக்கப்பட்டு, பம்பை உடுக்கை அடித்து பாட்டு பாடி இளைஞர்கள் மீது சுவாமி வந்த பிறகு காப்பு கட்டப்பட்டது. பின்னர் 3 கரகங்களை இளைஞர்கள் தலையில் சுமந்து வந்து அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாக வந்தனர். மூன்று கரகங்களும் ஊர்வலமாக வந்த போது ஊர் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அம்மனுக்கு பாத பூஜை செய்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டி வழிபட்டனர். ஊர் முழுவதையும் சுற்றி வலம் வந்த பிறகு மாலை சுமார் 6 மணி அளவில் கெங்கைஅம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு கூழ் வார்த்தல் திருவிழா ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து  கூழ்வார்த்தல் திருவிழாவை வானவேடிக்கையுடன் வெகு விமரிசையாக நடத்தினர். இந்த திருவிழாவில் அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்து படைத்த கூழினை கோயிலுக்கு  எடுத்து வந்து அம்மன் கோயிலில் கூழ்வாரத்...

மகாத்மா காந்தி தேசிய வெள்ளி விழா கராத்தே போட்டியில் ஷீகான் சரவணன் அவர்களுக்கு மாகாத்மா காந்தி வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை பழனிச்சாமி பன்னோக்கு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய வெள்ளி விழா  கராத்தே போட்டியில் 30க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் பங்கு பெற்றனர்.   கராத்தே போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 10, இரண்டாம் பரிசு 15, மூன்றாவது பரிசு 5 பேர். கியோஷி ரமேஷ் பாபு அவர்கள் ஆசியுடன் டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியில் ( ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே டோ இந்தியா) கராத்தே மாணவர்கள் தேசிய கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஷீகான் சரவணன்.ச அவர்களுக்கு மாகாத்மா காந்தி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவருக்கு அதற்கான கேடயம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.   உடன் சென்சாய்.கு . ராஜசேகர் கராத்தே  போட்டியில் கவுரவித்தார். போட்டி நடத்துநர் ஷீகான் சசிகுமார் அவர்கள், உதவி பயிற்சியாளர் கராத்தே விக்னேஸ்வரன் மற்றும் கராத்தே பிரபாகரன் மற்றும் கராத்தே பாண்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.