திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் கிராமத்தில் தேசப் பிரிவினையின் சோக வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக பாஜக திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆர்எஸ்எஸ் வேலூர் கோட்ட இணை அமைப்பாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் பிடி பழனிவேல் தலைமையுரை ஆற்றினார்.
மாவட்ட பொது செயலாளர் முருகன், மாவட்டச் செயலாளர் குமரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று சிறப்பான முறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
மாவட்ட பொது செயலாளர்கள் ரமேஷ், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாநிலச் செயலாளர் ஏ கே ஆர் கதிரவன், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய பொதுச் செயலாளர் அறிவழகன், ஒன்றிய துணைத் தலைவர்கள் ரஞ்சன், குமாரி அம்மா, மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்திய நாடு துண்டாடப்பட்ட சோக வரலாறு நினைவூட்டும் மௌன ஊர்வலம் மற்றும் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.




Comments
Post a Comment