Skip to main content

மகான் சிதம்பரம் சட்டி சுவாமிகளின் 65ம் ஆண்டு குருபூஜை விழா முன்னிட்டு 1000 நபர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம்

 திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் புதூர் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த மகான் சிதம்பரம் சட்டி சுவாமிகளின் மடாலயம் உள்ளது. மகானின் 65ம் ஆண்டு குருபூஜை விழா ஆடி அமாவாசையை முன்னிட்டு அவரது நினைவாக அறநிலையத்துறை, ஊர் பொதுமக்கள் மற்றும் செந்தில்குமார் ஏற்பாட்டில் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குருபூஜை விழா ஏற்பாடுகள் அனைத்தையும் ஊர் பொதுமக்கள் சார்பாக செந்தில்குமார் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் ஜீவசமாதி அடைந்து 103 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 65 ஆம் ஆண்டு குருபூஜை விழா ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று 1000 நபர்களுக்கு சாதம், சாம்பார், வடை, பொரியல், அப்பளம், மோர் உள்ளிட்ட அறுசுவை உணவு அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பாக குருபூஜை விழா நடைபெற்றது.

சிதம்பரம் சட்டி சுவாமிகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சுவாமிகள். இப்பகுதியில் மகானாக வாழ்ந்து வந்தார். அவர் ஜீவசமாதி அடைந்த இன்றும் அவர்கள் போற்றி வருவதற்கான காரணங்கள் பல மகிமைகள் உள்ளது. அவர் மிகச்சிறந்த சித்த வைத்தியராக அப்பகுதி மக்களுக்கு சுற்றுவட்டார பொது மக்களுக்கு வைத்தியம் செய்து வந்துள்ளார். அவர் சிகிச்சை அளித்தால் நிச்சயம் அனைத்து நோய்களும் குணமாகி உள்ளது. மக்கள் அனைவரும் அவரை மகானாக போற்றி வணங்கியுள்ளனர்.

  அவர் ஜீவசமாதி அடைந்ததிலிருந்து தற்போது வரை 65 ஆண்டு காலமாக குருபூஜை விழா ஆடி அமாவாசை அன்று அவரது நினைவாக இன்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மகான் வாழ்ந்த காலத்தில் அவருடைய பொருட்களை யாராவது களவு செய்ய முயற்சித்தால் அந்த பொருளை தொட்ட உடனே அதே இடத்திலேயே சிலை போல் நின்று கொண்டிருப்பார்களாம். அந்த மகான் வந்து அவர்களை அனுப்பினால் மட்டுமே அந்த இடத்தில் இருந்து நகர முடியும் என்பது அவருடைய சிறப்பாக விளங்கி வந்துள்ளது. அதனை ஊர் பொதுமக்கள் இன்று வரை நினைவுகூர்ந்து அவருடைய சிறப்பை போற்றி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...