3300 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நட்டு அடர்வனம் மற்றும் உயிர்வேலி அமைக்க முயற்சி எடுத்துள்ள விவசாயி, சமூக ஆர்வலர்கள் பாராட்டு
திருண்ணாமலை அடுத்த சம்பந்தனூர் கிராமத்தில் அடர்வணம் அமைப்பதன் மூலமாக உயிர்வேலி அமைக்க புது முயற்சியாக அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது 7 ஏக்கர் நிலப்பரப்பில் கோவையைச் சேர்ந்த பசுமை சுரேஷ் என்பவரின் ஆலோசனையை பெற்று மியா வாக்கிய முறையில் 3300 மரக்கன்றுகளை நடுகிறார்.
பூவரசன், பூங்கன், இலுப்பை, சந்தனம், தேக்கு, நீர் மருது, வில்வம், நாவல், கருங்கொனை தாத்திரி, நாவல் உள்ளிட்ட 13 வகையான மரக்கன்றுகள் மொத்தம் 3300 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடப்படுகிறது.
ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் திருவண்ணாமலை வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் பெறப்பட்டுள்ளது.
இந்த மரக்கன்றுகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றினால் தற்போது நடப்படும் மரக்கன்றுகள் உயிர் வேலியாக மலரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மரங்கள் மூலமாக உயிர்வேலி அமைப்பதால் மற்ற விலங்கினங்கள் அனைத்தும் இங்கு வாழ்வதற்கு ஒரு வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தப்படுவதாக கூறுகின்றனர்.
திருவண்ணாமலை அருமை லயன் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இது போன்று தங்கள் நிலங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு உறுதி ஏற்றுள்ளனர்.
தனது விவசாய நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு பசுமையை பாதுகாக்க முயற்சி எடுத்துள்ள விவசாயிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.







Comments
Post a Comment