கிரிவலப் பாதையில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவிக்கும் அருணாச்சலம் மகா அன்னதான மடம்
கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மாதா மாதம் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசிப்பிணியை போக்கி வருகிறார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை ஊராட்சியை சேர்ந்த கே.அருணாச்சலம் அவர்கள் பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அருணாச்சலம் மகா அன்னதான மடம் மற்றும் நாகாத்தம்மன் திருக்கோயில் திருப்பணிகளை சிறப்பான முறையில் தொடர்ந்து அருணாச்சலம் அவர்கள் செய்து வருகிறார்.
அங்கு பௌர்ணமி தினத்தன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆன்மீகப் பணிகளில் இவர் தொடர்ந்து பல ஆண்டு காலமாக சிறந்து செயல்பட்டு வருகிறார்.
1972 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கிரிவலப் பாதையில் கடந்த 50 ஆண்டு காலமாக தனியார் வசம் இருந்த சந்திர லிங்கத்திற்கு சொந்தமான 53 சென்ட் நிலம் அருணாச்சலம் அவர்களின் தொடர் போராட்டத்தின் பலனாக இந்து சமய அறநிலையத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது என்பது இவர் பணியின் குறிப்பிடத் தகுந்த சாதனைகள் ஆகும். இவர் இதுபோல் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஆன்மீகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இந்து கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் மாற்று மதத்தினர் உள்ளிட்ட பலராலும் அபகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அபகரிக்கப்பட்ட கோயில் நிலங்கள் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து சட்ட போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் மூலம் மீண்டும் கோயிலுக்கு மீட்டு கொடுப்பதை தனது தலையாய கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு அனுப்பப்பட்ட மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு கிரிவலப் பாதையில் உள்ள இந்திரலிங்கம், வள்ளுவர் மடம், வாயுலிங்கம் மற்றும் முனீஸ்வரன் திருக்கோயில் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்தக் கோயில் இடங்களை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக சத்திரப்பிரதா சாகு அவர்கள் பொறுப்பில் இருந்தபோது ஈசானிய மைதானம் அருகே இருந்த பூந்தோட்ட நந்தவனத்தின் 4.2 ஏக்கர் நிலத்தை மீட்டு இந்து அறநிலையத்துறையால் யாத்திரிநிவாஸ் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு யாத்திரிகர்களுக்கு தங்குமிடமாக தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் அருணாச்சலம் அடியார்கள்.
2668 அடி உயரமுள்ள தீப மலையான அண்ணாமலையார் மலையிலிருந்து மழைக்காலங்களில் உருவாகக்கூடிய நீரோடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பிளாட் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நீரோடை பாதைகளை சீரமைப்பு செய்து கிரிவலப் பாதையில் உள்ள தாதன் ஓடைகளை சீரமைப்பதற்கான முயற்சிகளையும் அதற்கான பல்வேறு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அருணாச்சலம் மகா அண்ணா மடத்தில் தெய்வீகப் பணியான ஆன்மீகப் பணியோடு புதிதாக தற்போது தேசியத்தையும் சுதந்திரத்திற்காக போராடிய தேசிய தலைவர்களின் புகைப்படங்களும் கிரிவலப் பாதையில் உள்ள மடத்தில் மிக பிரம்மாண்டமாக கிரிவலம் வருபவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பார்வைக்கு வைத்து தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பான முறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது வைக்கப்பட்டுள்ளது.
பாரதமாதா, தாமரை சின்னம், தெய்வப்புலவர் திருவள்ளுவர், வ உ சிதம்பரனார், சுவாமி விவேகானந்தர், சர்தார் வல்லபாய் பட்டேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், முத்துராமலிங்க தேவர், தியாகி கக்கன், கர்மவீரர் காமராசர் போன்ற தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு அருணாச்சலம் மகா அன்னதான மடத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.





Comments
Post a Comment