தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு தலைவர் அருணாச்சலம் அடியார்கள் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலையில் திருவண்ணாமலை வடக்கு ஒன்றியம், ஆடையூர் பஞ்சாயத்து சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கிளை அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் சுமார் 300 கிளைகளில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும், பொதுமக்களும் கலந்து கொண்டுகண்டன கோஷங்களை எழுப்பினர்.
பெண்களிடம் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பெண்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும், கள்ளச்சாராயத்தை அனுமதிக்க கூடாது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மக்கள் நல திட்டங்களில் ஊழல் செய்யாதே, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களின் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், இந்து கோயில்களை தாக்குதல் நடத்தி இடிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பெண்களும், பொதுமக்களும், பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





Comments
Post a Comment