அருள்மிகு ஸ்ரீ ஜெயகாளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், செல்லங்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜெயகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மிகவும் உங்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.
கடந்த இரண்டு நாட்களாக கோ பூஜை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை நிர்மாணம், முதல் கால பூஜை, யாகம் பூர்ணாஹீதி, சுவாமிக்கு அபிஷேகம், மங்கள இசை, குரு வந்தனம், விநாயகா அபிஷேகம், கோபூஜை, முதல் யாக சாலை பூஜை, மஹா பூர்ணாஹீதி, சாந்தி ஓமம், தம்பதி பூஜை, இரண்டாம் யாககால பூஜை, மூன்றாம் யாக கால பூஜை, நான்காம் யாக கால பூஜை, 108 கலச அபிஷேகம் உள்ளிட்டவைகள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
இன்று அதிகாலை ஸ்ரீ ஜெயகாளியம்மன் கோயில் வளாகத்தில் நான்காம் கால பூஜை, தீபாராதனை, பூர்ணாஹீதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கடம் புறப்படுதல், கோபுரம் ஸ்தூபி, பரிவாரங்கள் மகா கும்பாபிஷேகம் மூல ஆலய விக்ரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்வதற்காக கலச புறப்பாடு நடைபெற்று ஸ்ரீ ஜெயகாளியம்மன் ஆலய கோபுர உச்சியில் கலச புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமானது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.
பின்பு ஸ்ரீ ஜெயகாளியம்மன் ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.






Comments
Post a Comment