100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி, இனிப்புடன் கூடிய சில்வர் பாக்ஸ் வழங்கி அசத்திய ஒன்றிய தலைவர் ராஜேந்திரன்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை வடக்கு ஒன்றியம், கீழ்செட்டிபட்டு கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு விழா போல் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை வடக்கு ஒன்றிய பாஜகவின் ஒன்றிய தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் கீழ்செட்டிபட்டில் உள்ள அவரது சொந்த பூத்தில் நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உரையை ஆரம்பம் முதல் இறுதி வரை கேட்டு ரசித்தனர்.
பாரத பிரதமரின் மனதின் குரல் உரையின் போது அனைவரும் பாரத அன்னையின் புகழ் ஓங்குக என்று கோஷமிட்டு கரவொலி எழுப்பி உற்சாகத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒன்றிய தலைவர் ஜி.ராஜேந்திரன் ஏற்பாட்டில் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புடன் கூடிய சில்வர் பாக்ஸ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment