புதிய ராணுவ மருத்துவமனை கட்டிடம் கட்டும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தெற்கு பிராந்திய ராணுவ முதன்மை அதிகாரி
திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த தெற்கு பிராந்திய முதன்மை ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் இந்திர பாலன் அவர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் கேண்டீன் கட்டிடத்தை பார்வையிட்டு பின்னர் புதிதாக கட்டப்பட்டு வரும் கேண்டினின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து போளூர் சாலையில் உள்ள ஜவான் பவன் கட்டிடத்தை பார்வையிட்டு அங்கிருந்து சென்று புதிதாக ராணுவ மருத்துவமனை கட்டப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டார்.
ராணுவ மருத்துவமனை கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கட்டிடத்தின் வரைபடத்தை கட்டிடம் கட்டும் இடத்திலிருந்து ஆய்வு செய்து கட்டிடம் கட்டும் பணிகளை துரிதமான முறையில் துவக்குமாறு உத்தரவிட்டார்.
பின்னர் முன்னால் ராணுவ வீரர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார். முன்னாள் ராணுவ வீரர்களின் சிகிச்சைக்காக அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் சிஎம்சி மருத்துவமனை உள்ளிட்டவை இணைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கட்டி திறக்கப்பட்ட ஜவான் பவன் கட்டிடம் ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார்.
இவர்களுடன் ராணுவ மருத்துவ அதிகாரி கர்ணல் ருசி கேசவன், முன்னாள் ராணுவ வீரர்களின் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் P.கருணாநிதி, அனைத்து சங்கங்களின் மாவட்ட தலைவர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை ராணுவ முதன்மை அதிகாரி இந்திர பாலன் அவர்களிடம் முன் வைத்தனர்.
ராணுவ வீரர்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் ராணுவ வீரர்களின் மருத்துவமனை திருப்திகரமான முறையில் மருந்து, மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் முன்னாள் ராணுவ விரல்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையானது தொடர்ந்து சிறப்பான முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி கூறினார்.







Comments
Post a Comment