பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள ஏழைகளை கையேந்த வைக்கும் அவல நிலையை உண்டாக்கும் அரசு அலுவலர்களை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஏழைகளுக்கு வீடு வழங்காமல், மத்திய அரசு திட்டங்களில் ஊழல் செய்வதையே பிழைப்பாக கொண்டிருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு ஊழியர்களை கண்டித்து தண்டராம்பட்டு ஒன்றிய பாஜக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலை கண்டித்து தண்டராம்பட்டு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பார்வையாளர் வி.தசரதன் கண்டன உரை ஆற்றினார்.
முன்னாள் மாவட்ட தலைவர்கள் விஜயன், தர்மன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் இறை மாணிக்கம், மாவட்ட பொது செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், முருகன் , மாவட்ட துணை தலைவர்கள் ராஜ்குமார், சேகர்,முன்னாள் ஒன்றிய தலைவர் தயாநிதி, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு செயலாளர் தி.அறவாழி , முருகன்,
மாவட்ட செயலாளர்கள், கிருஷ்ணமூர்த்தி,குமரன், ரேணுகா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜதமயந்தி,அணி, பிரிவு தலைவர்கள், ரகு, சந்தோஷ், கலாவதி, பாலாஜி, சந்தீஷ், வெங்கடேசன், விஜயராஜ் உள்ளிட்டு 500க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் லஞ்சப் பணம் கொடுக்க முடியாமல் இருக்கும் தகுதியுள்ள ஏழைகளின் பெயர்களை சேர்க்காமல் அலைக்கழிப்பது, தகுதியுள்ள ஏழைகளின் பெயர்கள் இடம் பெற்றால் அவற்றை நீக்குவது, லஞ்ச பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களை வீடு வழங்கும் திட்டத்தில் சேர்ப்பது, பணம் கொடுத்தால் மட்டுமே வீடு வழங்கப்படும் என்று கராராக பொதுமக்களிடம் லஞ்சம் பெற்று கொழுத்து வாழ்வது,
வீடுகளுக்கு குடிதண்ணீர் கொடுக்காமல் ஜல் ஜீவன் திட்டத்தை பெயரளவுக்கு செயல்படுத்துவது என்று தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஊழல் ஆறு ஓடும் அலுவலகமாக மாற்றி தகுதியுள்ள ஏழைகளை கையேந்த வைக்கும் அவல நிலையை உண்டாக்கி இருக்கும் அரசு அலுவலர்களை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.







Comments
Post a Comment