25க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பயிற்சி பள்ளியின் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை நகர குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் கோமளவல்லி தலைமை தாங்கி மாணவர்களுக்கு வழங்கினார். காவல்துறை பணி செய்து வரும் கராத்தே பயிற்சியாளர் G.விஜய் முன்னிலை வகித்தார்.
ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் திருவண்ணாமலை நகரின் முத்துவிநாயகர் கோயில் தெருவில் உள்ள காவல்துறை குடியிருப்பில் இன்று காலை 25 க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இந்திய தலைவர் (JSKS ) கியோஷி A.ரமேஷ்பாபு அவர்கள் நல்லாசியுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் ( Inspector) குற்ற புலனாய்வு பிரிவு கோமளவள்ளி தலைமை தாங்கி கராத்தே தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோயில் தெரு காவலர் குடியிருப்பில் உள்ள கராத்தே G.விஜய் (காவல்துறை) பயிற்சியாளர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
கராத்தே ச.சரவணன் MBA, MTech (National Referee A Grade--KIO) மாநில செயலாளர் JSKS வரவேற்புரை நிகழ்த்தினார்.
கராத்தே A.S.பிரபாகர், கராத்தே K.பாண்டு இருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கராத்தே பயிற்சியில் தேர்ச்சி பெற்று பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
கராத்தே G.விஜய், கராத்தே ராஜு ஆகியோர் கராத்தே நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.





Comments
Post a Comment