பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள ஏழைகளை கையேந்த வைக்கும் அவல நிலையை உண்டாக்கும் அரசு அலுவலர்களை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஏழைகளுக்கு வீடு வழங்காமல், மத்திய அரசு திட்டங்களில் ஊழல் செய்வதையே பிழைப்பாக கொண்டிருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு ஊழியர்களை கண்டித்து தண்டராம்பட்டு ஒன்றிய பாஜக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலை கண்டித்து தண்டராம்பட்டு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பார்வையாளர் வி.தசரதன் கண்டன உரை ஆற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் விஜயன், தர்மன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் இறை மாணிக்கம், மாவட்ட பொது செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், முருகன் , மாவட்ட துணை தலைவர்கள் ராஜ்குமார், சேகர்,முன்னாள் ஒன்றிய தலைவர் தயாநிதி, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு செயலாளர் தி.அறவாழி...