50க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பயிற்சி பள்ளியின் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை பரணி தீபம் லயன் சங்கத் தலைவர் ஆடிட்டர் பச்சையப்பன் தலைமையில், கராத்தே தலைமை பயிற்சியாளர் T.சுரேஷ்குமார் Ex. MLA வழங்கினார். கராத்தே தேசிய நடுவர் Grade A ச.சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் திருவண்ணாமலை நகரில் உள்ள டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா இந்திய தலைமை பயிற்சியாளர் A.ரமேஷ்பாபு அவர்கள் ஆசியுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பரணி தீபம் லயன் சங்கத் தலைவர் ஆடிட்டர் பச்சையப்பன் அவர்கள் தலைமை தாங்கினார். கராத்தே தேசிய நடுவர் Grade A ச.சரவணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கராத்தே தலைமை பயிற்சியாளர் T.சுரேஷ்குமார் Ex. MLA அவர்கள் வாழ்த்துரை வழங்கி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
கராத்தே எம்.மூர்த்தி, தண்டராம்பட்டு கராத்தே விஜயகுமார், கராத்தே ஏ.எஸ்.பிரபாகரன், கராத்தே K.பாண்டு, கராத்தே அலங்கார் வெங்கடேசன், கராத்தே சுப்ரமணி, கராத்தே விக்னேஷ்வரன், கராத்தே ராஜு உள்ளிட்ட கராத்தே பயிற்சியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
லயன் சந்திரசேகர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கராத்தே ராஜசேகர் அவர்கள் நன்றி உரை வழங்கினார்.





Comments
Post a Comment