திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் நகரில் உள்ள ஸ்ரீ வாசவி மஹால் ஆரிய வைசிய மகாசபையில் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை, ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ரெடிமேட்ஸ் மற்றும் ஹரி மொபைல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
மருத்துவ முகாமில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொது மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், தோல், மகப்பேறு மருத்துவம், ரத்த கொதிப்பு, இசிஜி, கண் பரிசோதனை உள்ளிட்டவை இலவசமாக செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கி ஆலோசனைகளும் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களால் வழங்கப்பட்டது.
கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக நிகழ்ச்சியின் துவக்கத்தின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பேசும்போது கூறியதாவது, ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்த்து இப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகளை ஆதரிக்கும் கோரிக்கையுடன் இந்த இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இதனால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது,மேலும் சிறு வியாபாரிகள் தான் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு முதலாவதாக முன்வந்து அனைத்து சேவைகளையும் செய்கின்றனர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
ஆரிய வைசிய சமாஜிய செயலாளர் பாபு என்கிற வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
செஞ்சி லயன் சேகர், தேசிய நெடுஞ்சாலை துறை ஓய்வு பெற்ற பொறியாளர் ராஜேந்திரன், செஞ்சி வள்ளலார் சன்மார்க்க சங்க நிறுவனர் சர்தார் சிங் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
செஞ்சி கன்னிகா மொபைல் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்டின் நிறுவனர் ரமேஷ் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆரிய வைசிய சமாஜ துணைத்தலைவர் பாலசுப்ரமணியன் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.
பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினர் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருந்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த முகாமில் ஹரி மொபைல்ஸ் ஹரி கிருஷ்ணன், வியாபாரிகள் சங்க நிர்வாகி கோடீஸ்வரன், சரஸ்வதி ஸ்வீட்ஸ் ராஜேந்திரன், எஸ் பி எஸ் பாத்திரம் பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் அப்துல் சமத், திண்டிவனம் தமிழறிஞர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விர்ச்சுவல் மீடியா அருண் முகாமினை ஒருங்கிணைத்தார்.
பேராவூர் சுபாஷ் சந்திர போஸ் நன்றி கூறினார்.





Comments
Post a Comment