ரூ. 1.3 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் ஊராட்சி மன்ற தலைவர் P.மோகன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புதுப்பித்தல் பணி ரூபாய் 1.3 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது.
ரூபாய் 1.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று திறக்கப்பட்டது.
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் N.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் P.மோகன், துணைத் தலைவர் சுசிலா மற்றும் வார்டு உறுப்பினர்கள் மணி, உஷாராணி, நாராயணன், சின்ன பாப்பா, சக்தி, ஊராட்சி செயலர் பி மூர்த்தி, துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் பி. மோகன் இனிப்புகள் வழங்கினார்.



Comments
Post a Comment