தீய சக்தி திமுக கவுன்சிலரால் இந்திய ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மறைந்த ராணுவ வீரர் பிரபுவின் திருவுருவப்படத்திற்கு முன்னால் ராணுவ வீரர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை, ஆரணி, கலசப்பாக்கம், செய்யார், வந்தவாசி, போளூர், கண்ணமங்கலம், கேளூர், களம்பூர், சேத்பட், வேட்டவலம், படவேடு, ஜமீன் கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தங்களின் ராணுவ சகோதரர் திமுக கவுன்சிலரால் ஈவு இரக்கமின்றி சட்டவிரோதமான முறையில் படுகொலை சம்பவத்தை அரங்கேற்றிய நபர் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக கவுன்சிலரை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் உரிய முறையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளி மீது அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவொளி பூங்கா அருகே படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் ராணுவ வீரர் சங்கத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை நகரில் உள்ள அறிவொளி பூங்கா முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.



Comments
Post a Comment