உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளுடன் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி
திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு நடுநிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் P.மோகன் தலைமையில் மாணவர்களின் அறிவியல் படைப்புகள் செயல்முறை விளக்கங்களுடன் அறிவியல் கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 114 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இன்று உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் தலைமையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகள் மற்றும் மாணவர்களின் அறிவியல் செயல்முறை விளக்கங்களுடன் அறிவியல் கண்காட்சியானது மாணவர்களால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.மேலும் அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதன் மூலம் மாணவர்கள் தங்களின் அறிவியல் சார்ந்த தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. மாணவர்களின் படைப்புகள் குறித்து சிறப்பு விருந்தினர்களுக்கு மாணவர்கள் செயல்முறை விளக்கமும் அளித்தனர். ஊராட்சி மன்ற...