துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா, பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு.
திருவண்ணாமலை மாவட்டம், கோவூர் ஊராட்சியில் நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சி துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் A.தங்கராஜி தலைமையில், மாவட்டத் தலைவர் R.பாலசுப்ரமணியன் முன்னிலையில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து சிறப்பான முறையில் நடைபெற்றது.உலகம் போற்றும் உத்தம தலைவர், மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாசியுடன், தமிழகத்தின் அடுத்த முதல்வர், பாஜக மாநில தலைவர், தமிழகத்தின் இளம் சிங்கம் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் B.Sc அவர்களின் ஆலோசனைப்படி துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் A.தங்கராஜி M.A அவர்களின் தலைமையில் நம்ம ஊரு பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கோவூர் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் ஏராளமான தாய்மார்களுக்கு கோலப்போட்டி மற்றும் இளைஞர்களுக்கு கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு ஒன்றிய தலைவர் A.தங்கராஜி மற்றும் மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோரால் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சியில் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பட்டுப் புடவை, பொங்கல் வைக்க சில்வர் பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டதால் ஊர் பொதுமக்களும், கட்சியின் நிர்வாகிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து இறைவனை வழிபட்டு பரிசுகளை தட்டிச்சென்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் K.கிருஷ்ணன், விவசாய அணி தலைவர் K.ஆறுமுகம், கிளைத்தலைவர் D.சந்தோஷ், விவசாய அணி பொதுச்செயலாளர் சக்திவேல், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் K.தேவேந்திரன், ஊரக வளர்ச்சி பிரிவு தலைவர் B.மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.கோவிந்தராஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.அபிதா உள்ளிட்டோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
பாஜக மாவட்ட பொது செயலாளர்கள் சதீஷ், முருகன், மாவட்ட பொருளாளர் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி தலைவர் சந்தோஷ் பரமசிவம், இளைஞரணி பொதுச் செயலாளர் புகழ் மூவேந்தன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் எஸ். சங்கர், விக்னேஷ் பாஜக தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.








Comments
Post a Comment