திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சட்டமன்றத் தொகுதி பூத் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கலசப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் K.R.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவிற்கு உட்பட்ட கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி , செங்கம் சட்டமன்றத் தொகுதி ஒன்றியங்களான செங்கம் கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள்,செங்கம் நகர் BLA 2 எனப்படும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி இன்று திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் ஏழுமலையான் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் K.R.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் V.ஆதவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் கலத்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் , மாநில செயற்குழு உறுப்பினர் நேரு, மாவட்ட துணை தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் குமரன், ஒன்றிய தலைவர்கள் ஐயப்பன், இளங்கோ, ரமேஷ், கோவிந்தவாசன், முனியப்பன்,என் கே ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜதமயந்தி, ஐடி பிரிவு மாநில செயலாளர் ப்ரதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment