நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம், இனிப்பு, உதவித்தொகை வழங்கி குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அருணாச்சலம் அடியார்கள்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலை சந்திரலிங்கம் அருகே ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம் உள்ளது.
ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம் மற்றும் கிராம திருக்கோயில் திருப்பணி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அருணாச்சலம் அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் முடிந்து அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் வரும்போது ஆண்டாண்டு காலமாக பொதுமக்களுக்கு அன்னதானம், சாதுகளுக்கு வஸ்திர தானம் மற்றும் உதவித்தொகை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை மாத பௌர்ணமி கிரிவலம் முடிந்து அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம் வந்தபோது சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி வணங்கி வழிபட்டார்.
பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும், நூற்றுக்கணக்கான கிரிவல தூய்மை பணியாளர்களுக்கு உதவித்தொகை, இனிப்பு சாதுக்களுக்கு வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
மேலும் கிரிவலம் வரும் பக்தர்கள் தங்களின் தாகம் தணிக்கும் வகையில் குடிநீர் தொட்டியையும் துவக்கி வைத்தார்.
ஆன்மீகப் பணியை 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான முறையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் அருணாச்சலம் அடையார் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment