கொட்டும் மழையிலும் 500 கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை, சிறந்த பசுங்கன்றுகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டாப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் தலைமையில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டது.
கொட்டும் மழையிலும் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, மலட்டு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு கால்நடைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் கால்நடை முகாமை நடத்துவதற்கு உதவி புரிவதற்காக கலந்து கொண்டனர், அவர்களுடன் திட்ட அலுவலர்கள் G.சகுந்தலா, K.சுதா, P.நந்தினி தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
கால்நடை மருந்தக நூக்காம்பாடி மருத்துவர் முருகவேல், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து மருந்துகளை வழங்கினர்.
வடஆண்டாப்பட்டு ஊராட்சிமன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் அவர்கள் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பான முறையில் செய்திருந்தார்.
சிறந்த இடம் பிடித்த முதல் மூன்று பசுங்கன்றுகளுக்கு பரிசுகளும் இந்த கால்நடை முகாமில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment