திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் கடந்த 24 ஆம் தேதி முதல் 7 நாட்களாக திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கால்நடை மருத்துவ முகாம், கோயில் வளாகம் தூய்மைப்படுத்தும் பணி, பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தும் பணி, பள்ளியில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நலப்பணித்திட்ட செயல்பாடுகளில் மாணவிகள் ஈடுபட்டனர். நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் நிறைவு விழா நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் P.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தி பேசினார். சிறந்த சாதனை மாணவிகளாக நீங்கள் அனைவரும் வர வேண்டும். எந்த உதவி தேவைப்பட்டாலும் அதற்கு என்னை எந்த நேரத்திலும் அணுகலாம் என்று ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தெரிவித்தார். நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, சேரியந்தல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.சுகுணா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுசிலா ரேணு, செயலாளர் மூர்த்தி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சகுந...