ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு பொறுப்பேற்ற யுக குரு கருடானந்தா மகராஜ் சுவாமிஜி ரதத்தை சிறப்பான முறையில் வழிநடத்திச் சென்றார்
அயோத்தியில் இருந்து புறப்பட்ட ராம ராஜ்ய ரத யாத்திரை திருவண்ணாமலை வருகை தந்தது.
கிரிவலம் வந்த ரதத்தை யுக குரு கருடானந்தா மகராஜ் சுவாமிஜி கன்னியாகுமரி முதல் காட்பாடி வரை பொறுப்பேற்று திருவண்ணாமலைக்கு வரவேற்றார்.
ரதத்தை பாஜகவினர், பக்தர்கள் மற்றும் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பிலும் வரவேற்றனர்.
27 மாநிலங்களைக் கடந்து திருவண்ணாமலைக்கு வந்தடைந்த ராம ரத யாத்திரைக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு நாயுடு மங்கலம் கலசப்பாக்கம் போளூர் வழியாக காட்பாடி வரை சென்ற ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு பொறுப்பேற்ற யுக குரு கருடானந்தா மகராஜ் சுவாமிஜி ரதத்தை சிறப்பான முறையில் வழிநடத்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment