பால் விலை உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை கண்டித்தும், மின் கட்டண முறைகேட்டைக் கண்டித்தும் மற்றும் திமுக ஆட்சியில் நடைபெற்றுவரும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றியம் பாஜக சார்பில் அதன் ஒன்றிய தலைவர் அ.கோ.வெங்கடேசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் ராஜ லட்சுமி, திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் மாவட்ட பாஜக தலைவர் தர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டனப் பேருரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.



Comments
Post a Comment