திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் A.தங்கராஜி எம் ஏ தலைமை தாங்கி திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து தலைமை உரையாற்றினார்.எஸ்.சங்கர் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக
மாநில செயற்குழு உறுப்பினர் கருணாகரன்,
மாவட்ட துணைத்தலைவர் பானுநிவேதிதா, மாநில பொதுக்குழு உறுப்பினர் இளஞ்செழியன்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
ஒன்றிய செயலாளர்
கிருஷ்ணன், கிருஷ்ணகுமார், ரத்னவேல்
துணைத் தலைவர்கள் பாஸ்கரன்,தனசேகர்,
ஒன்றிய விவசாய அணித் தலைவர் அறுமுகம்,
மத்திய அரசு நலத்திட்டபிரிவு தலைவர் மணிகண்டன், சந்தோஷ்
ஆன்யப்பன், சுரேஷ்,
கார்த்திக் மற்றும் 400க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு கண்டனம் தெரிவித்து திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





Comments
Post a Comment