ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவராக சுபேதார் மேஜர் P.கருணாநிதி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சுபேதார் மேஜர் P.கருணாநிதி அவர்களை முன்னாள் ராணுவ வீரர்கள் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ராணுவ வீரர்கள் பயிற்சி மையத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்க செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பென்னாத்தூர்,போளூர், செய்யார், கண்ணமங்கலம், திருவண்ணாமலை, செங்கம், வேட்டவலம், ஜமீன் கூடலூர், கேளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி தாலுக்கா உள்ளிட்ட பெரும்பாலான தாலுகாக்களில் இருந்து அனைத்து சங்க தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுபேதார் மேஜர் P.கருணாநிதி அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்க தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சங்கத்தின் துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வரும் நாட்களில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுபேதார் மேஜர் P.கருணாநிதி அவர்களின் பெயரை தலைவர் பொறுப்புக்கு கேப்டன் லோகநாதன் முன்மொழிந்தார், கேப்டன் தயாளன் வழிமொழிந்தார்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.






Comments
Post a Comment