திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவராக புதிதாக A.தங்கராஜி M.A, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
A.தங்கராஜி அவர்களை ஒன்றிய தலைவராக நியமித்த மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை IPS, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், மாவட்ட தலைவர் R ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் குமாரராஜா உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
பாஜக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்கராஜி அவர்களின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பாரதிய ஜனதா கட்சி துரிஞ்சாபுரம் ஒன்றிய பகுதியில் சிறப்பான முறையில் கட்சி வளர்ச்சி அடைய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து சிறப்பான முறையில் பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார்.



Comments
Post a Comment