பிரதமர் மோடியை உலகமே உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது, அவர் எந்த ஒரு அஸ்திரத்தை கையில் எடுத்தாலும் அது சூப்பர் ஹிட், மாநில பாஜக பிரச்சார பிரிவு துணைத் தலைவர் காயத்ரி சீனிவாசன் பேச்சு.
திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள லட்சுமி அரங்கநாதன் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பிரச்சார பிரிவு துணைத் தலைவர் காயத்ரி சீனிவாசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி யோகாசனம் செய்தார்.
அவர் பேசும்போது கூறியதாவது,
யோகா என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம், அதனை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்ய ஆரம்பித்த பின்னர் அது பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரத் தொடங்கியது.
அவர் எதைக் கையில் அஸ்திரமாக எடுக்கிறாரோ அவை அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறும். உலகமே அவரை உற்றுநோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது.
மிகப்பெரிய மகான் நமக்கு பாஜகவில் ஒரு தலைவராக இருக்கிறார். நரேந்திர மோடி இருக்கும் காலத்தில் நாம் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருக்கிறோம் என்பதே மிகப் பெரிய பெருமையான விஷயம்.
திருவண்ணாமலை ஒரு புண்ணிய பூமி இங்கு வந்து யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு காயத்ரி சீனிவாசன் பேசினார்.
நகர தலைவர் திருமாறன் தலைமையில், மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலையில், சமூக நல்லிணக்க பேரவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனகிருஷ்ணன் அவர்கள் சர்வதேச யோகா நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
தடாசனம், உத்தானாசனம், திரிகோணாசனம், வஜ்ராசனம்,பத்ராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை அனைவரும் ஆர்வமுடன் செய்தனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் குமார், மாவட்ட பொருளாளர S.P.K.சுப்பிரமணியன், ஓபிசி மாநில துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் கருணாகரன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன், மாவட்ட மகளிரணி தலைவர் சந்திரா, மலர்க்கொடி, நகர பொதுச் செயலாளர் சரவணன், நகர பொருளாளர் சரவணன், நகர செயலாளர்கள் ஞானஜோதி, ஸ்ரீதர், சத்தியமூர்த்தி, நகர இளைஞரணி தலைவர் பிரவீன் குமார், ஹரிஹரசுதன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கட்சிப் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.








Comments
Post a Comment