இந்திய சுதந்திர போராட்ட விடுதலைக்காக 29 முறை சிறைசென்ற வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் 136 வது பிறந்தநாள் விழா, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் அருகில் வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் 136 வது பிறந்தநாள் விழா வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் அவர்கள் தனது வாழ்நாளில் 29 ஆண்டு காலத்தை சிறையிலேயே கழித்தவர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அவரது புகழை போற்றி இனிப்புகள் வழங்கி வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவர் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க ஆரணி, செய்யார் தொகுதியில் வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா விமரிசையாக நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் M.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாநில துணைப் பொதுச் செயலாளர் S.தணிகைவேல்,மாவட்ட இளைஞரணி தலைவர் S.குட்டிமணி,மாவட்ட இளைஞரணி செயலாளர் N.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அவர்களுடன் ஒன்றிய நிர்வாகிகள் பழனி, மணிவண்ணன், முரளி, செல்வம், பரசுராமன், ராமச்சந்திரன், மணிகண்டன், ரமேஷ், பன்னீர்தாஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து வீரத் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
வீரத் தியாகியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மருத்துவ சமுதாய மக்களை ஒருங்கிணைத்து வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சியை மென்மேலும் பெரிய வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வோம் என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.



Comments
Post a Comment