Skip to main content

Posts

Showing posts from June, 2022

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவராக சுபேதார் மேஜர் P.கருணாநிதி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சுபேதார் மேஜர் P.கருணாநிதி அவர்களை முன்னாள் ராணுவ வீரர்கள் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ராணுவ வீரர்கள் பயிற்சி மையத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்க செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பென்னாத்தூர்,போளூர், செய்யார், கண்ணமங்கலம், திருவண்ணாமலை, செங்கம், வேட்டவலம், ஜமீன் கூடலூர், கேளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி தாலுக்கா உள்ளிட்ட பெரும்பாலான தாலுகாக்களில் இருந்து அனைத்து சங்க தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுபேதார் மேஜர் P.கருணாநிதி அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்க தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பல்வே...

துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவராக A.தங்கராஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவராக புதிதாக A.தங்கராஜி M.A, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.  A.தங்கராஜி அவர்களை ஒன்றிய தலைவராக நியமித்த மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை IPS, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், மாவட்ட தலைவர் R ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் குமாரராஜா உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.   பாஜக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்கராஜி அவர்களின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  பாரதிய ஜனதா கட்சி துரிஞ்சாபுரம் ஒன்றிய பகுதியில் சிறப்பான முறையில் கட்சி வளர்ச்சி அடைய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து சிறப்பான முறையில் பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார்.

பிரதமர் மோடியை உலகமே உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது, அவர் எந்த ஒரு அஸ்திரத்தை கையில் எடுத்தாலும் அது சூப்பர் ஹிட், மாநில பாஜக பிரச்சார பிரிவு துணைத் தலைவர் காயத்ரி சீனிவாசன் பேச்சு.

திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள லட்சுமி அரங்கநாதன் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில்  சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பிரச்சார பிரிவு துணைத் தலைவர் காயத்ரி சீனிவாசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி யோகாசனம் செய்தார்.  அவர் பேசும்போது கூறியதாவது, யோகா என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம், அதனை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்ய ஆரம்பித்த பின்னர் அது பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரத் தொடங்கியது. அவர் எதைக் கையில் அஸ்திரமாக எடுக்கிறாரோ அவை அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறும். உலகமே அவரை உற்றுநோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய மகான் நமக்கு பாஜகவில் ஒரு தலைவராக இருக்கிறார். நரேந்திர மோடி இருக்கும் காலத்தில் நாம் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருக்கிறோம் என்பதே மிகப் பெரிய பெருமையான விஷயம். திருவண்ணாமலை ஒரு புண்ணிய பூமி இங்கு வந்து யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு காயத்ரி சீனிவாசன் பேசினார். நகர தலைவர் திருமாறன் தலைமையில், மாவட்டத் ...

இந்திய சுதந்திர போராட்ட விடுதலைக்காக 29 முறை சிறைசென்ற வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் 136 வது பிறந்தநாள் விழா, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் அருகில் வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் 136 வது பிறந்தநாள் விழா வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் அவர்கள் தனது வாழ்நாளில் 29 ஆண்டு காலத்தை சிறையிலேயே கழித்தவர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அவரது புகழை போற்றி இனிப்புகள் வழங்கி வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவர் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க ஆரணி, செய்யார் தொகுதியில் வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா விமரிசையாக நடைபெற்றது.   மாவட்ட துணைத்தலைவர் M.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாநில துணைப் பொதுச் செயலாளர் S.தணிகைவேல்,மாவட்ட இளைஞரணி தலைவர் S.குட்டிமணி,மாவட்ட இளைஞரணி செயலாளர் N.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ...